Kanni Thai-文本歌词

Kanni Thai-文本歌词

Hema John
发行日期:

கன்னித்தாய் மரியாள் வரவேற்றாள் தெய்வமகன்

சிப்பியவள் பொற்குடத்தில் முத்தெனவே அவதரித்தார்

ஆவியினால் ஆண்டவனை

அவள் சுமக்கக் கொடுத்து வைத்தாள்!

விண்ணுலகம் மகிழ்ந்து பண்பாடும்

மண்ணுலகம் வியந்து கொண்டாடும்

மனங்களில் அமைதி வென்றாளும்

மனிதரில் பாசம் உண்டாகும்

1. கிருபையினால் மா தேவன் – இரக்கம்

பெற்றாள் பணிந்ததினால்

மகிமையின் கர்த்தனிடம்

வலிமையின் தேவனிடம்

பலவான்கள் தலைகுனியும் – இனி

கனவான்கள் கைவிரியும்

2. தெய்வத்தின் நல் விருப்பம் – என்றும்

தெய்வமகன் விரும்பும் அப்பம்

ஜீவனின் அதிபதிதான்

ஜீவனைக் கொடுக்க வந்தார்

பாவத்தைத் தொலைக்க வந்தார் – வல்ல

சாத்தானை ஜெயிக்க வந்தார்

3. மானுட அவதாரம் – ஒன்றே

ஆண்டவரின் திரு விருப்பம்

தாழ்ந்தவர் உயர்ந்திடுவார்

பசித்தவர் விருந்துண்பார்

புதியதோர் சமுதாயம் – இனி

மலர்ந்திடும் அவனியெங்கும்