Poi Varavaa-文本歌词

Poi Varavaa-文本歌词

Harris Jayaraj
发行日期:



மெல்ல விடைகொடு விடைகொடு மனமே
இந்த நினைவுகள் நினைவுகள் கனமே
தாய் மண்ணே செல்கின்றோம் தூரம் தூரம்

இங்கு உறவுகள் பிரிவுகள் வருதே
சில அழகிய வலிகளும் தருதே
போகின்றோம் போகின்றோம் தூரம் தூரம்

ஓ... ஓ...
என்னை விட்டுச் செல்லும் உறவுகளே
ஓ... ஓ...
உயிர் தெட்டுச் செல்லும் உணர்வுகளே
போய் வரவா

ஆ... ம்.... ஆ... ம்...

நண்பன் முகம் நெஞ்சில் நடந்து போகும்
காதல் தென்றல் கூடு கடந்து போகும்
இப் பயணத்தில் பொன் நிணைவுகள் நெஞ்சடைக்குமே

காடு மலை செல்ல துவங்கும் போதும்
நெஞ்சில் சொந்தங்களின் நிணைவு மூடும்
கை குழந்தையை அணைக்கவே மெய் துடிக்குதே

ஆயினும் ஆயிரம்
என்ன அலைகள் அலைகள் அலைகள் நெஞ்சோடு
ஆயிரம் ஞாபகம்
உயிர் துடிப்பாய் துடிக்கும் எங்கள் மண்ணோடு
போய் வரவா

~ இசை ~

எங்கே மகன் என்று எவரும் கேட்க
ராணுவத்தில் என தாயும் சொல்ல
அத் தருணம் போல் பொற்பதக்கங்கள்
கை கிடைக்குமா

நாட்டுக்கென்று தன்னை கொடுத்த வீரம்
ஆடை மட்டும் வந்து வீடு சேரும்
அப் பெருமை போல் இவ்வுலதில் வேறு இருக்குமா

தேசமே தேசமே
என் உயிரின் உயிரின உயிரின் தவமாகும்
போரிலே காயமே
என் உடலின் உடலின் உடலின் வரமாகும்
போய் வரவா

மெல்ல விடைகொடு விடைகொடு மனமே
இந்த நினைவுகள் நினைவுகள் கனமே
தாய் மண்ணே செல்கின்றோம் தூரம் தூரம்

இங்கு உறவுகள் பிரிவுகள் வருதே
சில அழகிய வலிகளும் தருதே
போகின்றோம் போகின்றோம் தூரம் தூரம்

ஓ... ஓ...
என்னை விட்டுச் செல்லும் உறவுகளே
ஓ... ஓ...
உயிர் தெட்டுச் செல்லும் உணர்வுகளே
போய் வரவா